பக்கம்:பாட்டும் கதையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பல்லும் நகமுமில்லா - உன்னைப் பார்த்து நான்மிக அஞ்சுவனே? கொல்லுவேன்” என்றுசொல்லிக் - கிழவன் கோடரி ஒன்றைத் தூக்கிவிட்டான். 'உன்றன் மகள் வேண்டாம் - நான் உயிர்பிழைத் தாலின்று அதுபோதும்” என்றே சொல்லிவிட்டுச் - சிங்கம் எடுத்தது ஓட்டம் காட்டுக்குள்ளே. காட்டில் ஒரு விறகுவெட்டி வாழ்ந்து வந் தான். அவன் கிழவன். அவனுக்கு அழகான ஒரு பெண் இருந்தாள். காட்டுக்கு அரசனை சிங்கம், ஒருநாள் கிழவன் வீட்டுப் பக்கம் வந்தது ; கிழவனுடைய மகளைப் பார்த்தது; அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியது. அப்போது கிழவன் அங்கு வந்தான். சிங்கம் அவனை நோக்கி, ஏ கிழவா ! கர்ட்டுக்கு அரசனுகிய நான், உன் பெண்ணை மணந்துகொள்ள விரும்புகிறேன். மறுத்து விடாதே’ என்று மிரட்டியது. பெண் கொடுக்க மறுத்துச் சிங்கத்தின் பகையைத் தேடிக் கொள்ளக் கிழவன் விரும்பவில்லை. 52