பக்கம்:பாட்டும் கதையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்புப் பாரம் குறைந்ததனுல் உள்ளம் மகிழ்ந்தே அக்கழுதை தப்புக் கணக்குப் போட்டதடா தாவிக் குதித்தே சென்றதடா. மீண்டும் ஒருநாள் உப்போடு மெதுவாய் அவ்வழி வரும்போது வேண்டும் என்றே தண்ணிரில் வீழ்ந்தது கழுதை மூட்டையுடன் குப்பன் கழுதை எண்ணத்தைக் குறிப்பால் அறிந்தான் அப்போது தப்புக் கருத்தைப் போக்குதற்கே தக்க தருணம் பார்த்திருந்தான். புத்தியற்ற கழுதையின் மேல் பொதியாய் மணலை ஏற்றிவைத்தே மெத்த உள்ளம் மகிழ்ச்சியுடன் மெதுவாய்க் குப்பன் நடந்துவந்தான். அருவிக் கருகே வந்தவுடன் அன்றும் கழுதை காலிடறி மறுமுறை ஓடையில் விழுந்ததடா - மணலும் நீரில் நனைந்ததடா. 55