பக்கம்:பாட்டும் கதையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தும் கடலினில் நேற்றிருந்தேன்-விண்ணில் கார்மேக மாயின்று மாறிவிட்டேன் மெத்த உடம்பு கருத்துவிட்டேன்-இன்று மேனி நடுங்கக் குளிர்ந்துவிட்டேன். கொல்லி மலையைக் கடந்துவந்தேன்-தஞ்சைக் கோபுரத் தின்மீது மோதிவந்தேன் மல்லைக் கலங்கரைத் தீபத்தையும்-என்றன் மனது குளிரத் தழுவிவந்தேன். காவிரித் தாயினைப் பார்த்துவந்தேன்-அவள் கரையருகே சற்று நின்றுவந்தேன் பூவிரி சோலையின் உச்சியிலே-தங்கிப் பொழுதைக் கழித்துப் புரண்டுவந்தேன். .62