பக்கம்:பாட்டும் கதையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணில் இடித்து முழங்கிவந்தேன்-மின்னல் வேலினை எத்திக்கும் பாய்ச்சிவந்தேன் கண்ணில் மழைத்துளி சிந்திவந்தேன்-உங்கள் கவலையை நானின்று போக்கவந்தேன். மேற்கு மலையில் குதித்துவந்தேன்-உயர் மேட்டு ரணையை நிரப்பிவந்தேன் காற்றினில் ஏறித் தவழ்ந்துவந்தேன்-சோழன் கல்லணை கூட நிரப்பிவந்தேன். ஏங்கும் உழவர் மகிழ்ச்சிபெற்ருர்-தோளில் ஏரினைத் துரக்கிக் கிளம்பிவிட்டார் பாங்கியர் சூழ உழத்தியர்கள்-பள்ளுப் பாடலைப் பாடத் தொடங்கிவிட்டார்.