பக்கம்:பாட்டும் கதையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தன் என்ற பணியாளன் மூச்சுத் திணற அங்கவற்றுள் மெத்தப் பருத்த மூட்டையினை மெதுவாய்ச் சுமந்து நடந்துவந்தான். சின்னச் சின்ன மூட்டைகளைச் சிரசில் சுமந்த பணியாட்கள் பின்னல் வந்த முத்தனையே பேசிப் பேசிச் சிரித்தார்கள். வெய்யில் நேரம் வந்தவுடன் வேலைக் காரர் பசிகொண்டார் நொய்யல் ஆற்றுச் சோலையினை நோக்கிச் சென்ருர் எல்லாரும். முத்தன் தனது மூட்டையினை முன்னுல் வைத்தான்; பணியாட்கள் அத்தனை பேரும் ஆவலுடன் அதனைப் பிரித்துப் பார்த்தார்கள். உணவுப் பொருளை அதில்கண்டார் . உடனே உண்ணத் தொடங்கிவிட்டார் கணநே ரத்தில் மூட்டையினைக் காலி செய்து விட்டார்கள். 69 un-6