பக்கம்:பாட்டும் கதையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுப்பகல் நேரம் வந்தவுடன் எல்லாரும் நொய்யல் ஆற்றங்கரைச் சோலையில் தங்கினர். முத்தன் தன் மூட்டையை இறக்கி வைத்தான். அது சோற்று மூட்டை. எல்லா வேலைக்காரர் களும் சேர்ந்து அச்சோற்று மூட்டையைக் காலி செய்துவிட்டனர். சிறிது நேரம் எல்லா ரும் களைப்பாறிவிட்டு மீண்டும் புறப்பட்டனர். மற்றப் பணியாட்கள் தங்கள் மூட்டையைச் சுமந்து கொண்டு புறப்பட்டனர். வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமலும், மூட்டை யின் சுமையைத் தாங்க முடியாமலும் எல்லா ரும் வாடினர். முத்தன் கையை வீசிக்கொண்டு நடந்தான். “ புத்திமான் பலவான் ஆவான்.” шт—7