பக்கம்:பாட்டும் கதையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதைக் கேட்டதும் ஓநாய் திரும்பிக் காட்டுக்கு ஓடத் தொடங்கியது. நாய் ஏனென்று கேட்டது. ஒகாய : சோற்றைப் பெரிதென்று எண்ணிவிட்டாய்-நீ சுதந்தர வாழ்வை விற்றுவிட்டாய்! காற்றைப் போலப் பறந்தோடி-நான் காட்டில் திரியச் செல்லுகிறேன். பாலும் சோறும் கிடைக்குமென்ரு-நீ பட்டை கழுத்தில் பூணுகிருய்? தோலும் உடலும் மெலிந்தாலும்-இந்தத் தொல்லை எனக்குத் தேவைஇல்லை. உரிமை இழந்து வாழ்வதினும்-நம் உயிரை விடுதல் மேலாகும் அருமை அண்ணு இவ்வுரையை-நீ அறிந்து வாழ்தல் முறையாகும்.