இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அல்லிக்கண் பூத்துவிடு கண்ணே-என்னை ஆரத் தழுவிவிடு கண்ணே முல்லைப்பல் காட்டிவிடு கண்ணே - ஓர் முத்தம் கொடுத்துவிடு கண்ணே குத்து விளக்கலவோ கண்ணே - நீ கோவில் சிலையலவோ கண்ணே முத்திரைப் பொன்னலவோ கண்ணே - நீ முத்துச் சரமலவோ கண்ணே கொஞ்சும் பசுங்கிளியோ கண்ணே-நீ கூவும் பொறிக்குயிலோ கண்ணே அஞ்சி நடப்பதென்ன கண்ணே-என் ஆவியில் கூடிவிட்டாய் கண்ணே 88