பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பதிற்றுப்பத்து

ஒவ்வொரு சேரவேந்தரைப் பற்றிப் பத்துப் பத்துப் பாட்டுகளாகச் சேரமன்னர் பதின்மரைப் பற்றிய நூறு பாட்டுகள் கொண்ட தொகுதியாதலின் இந்நூல் பதிற்றுப் பத்து எனப் பெயர் பெற்றது. பதிற்றுப்பத்து சங்க இலக்கியத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை நூற்களில் ஒன்று. முதற்பத்தும் இறுதிப்பத்தும் இன்று கிடைக்கவில்லை. எஞ்சிய எட்டுப்பத்துக்ளே இன்று பதிற்றுப்பத்துத் தொகுதியில் காணப்படுகின்றன.

இரண்டாம் பத்தில் ஊதியஞ்சேரலின் மகனான

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டுர் கண்ணாரும், மூன்றாம் பத்தில் பல் யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாலைக் கெளதமனாரும், நான்காவது பத்தில் களங்காய்க்கண்ணி நார்முடிச்

சேரலைப்பற்றிக் கா ப் பி யா ற் று க் காப்பியனாரும், ஐந்தாவது பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டு வனைப் பற்றிப் பரணரும், ஆறாம் பத்தில் ஆடு கோட் பாட்டுச் சேரலாதனைப் பற்றிக் காக்கை பாடினியார் நச்செள்ளையாரும், ஏழாம் பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கபிலரும், எட்டாவது பத்தில் பெருஞ்சேரலிரும்பொறையைப் பற்றி அரிசில் கிழாரும், ஒன்பதாவது பத்தில் குடக்கோ இளஞ்சேரவிரும் பொறையைப் பற்றிப் பெருங்குன்றுார்க்கிழாரும் பாடி யுள்ளனர். முதல்பத்து உதியன் சேரல் என்பானைப் பற்றி

urr.—7