பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பாட்டும் தொகையும்

பலர் புகழப் பாடும் வீரச் செல்வத்தில் தலையாக நின்றார் என்பதனைக் குமட்டுர்க் கண்ணனார் குறிப்பிடுகின்றார்.

வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின் பலர் புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே கவிர்ததை சிலம்பில துஞ்சும் கவரி பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொ டாயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே

-பதிற்றுப்பத்து 11: 18-25 செங்குட்டுவனின் படைவீரர்கள் அம்பு தம் மார்பில் பட்டாலும் தளராமற் சென்று போர் புரிவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பொலம்பூங் தும்பைப் பொறிகிளர் துாணிப்

புற்றடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்

ஒசிவுடை வில்லின் ஒசியா நெஞ்சின்

-பதிற்றுப்பத்து 45: 1-3

மேலும் சேர வீரர்கள் பகைவர்மதில் கடந்தல்லது உணவை உண்ணமாட்டோம் எனச் சூளுரை செய்து விட்டு, சமையல் செய்யுங் கலங்களை மதிலுக்குள் போட்டு விட்டு மதிலைவென்று உட்புகுந்த பிறகே அடுத்தவேளை உணவைச் சமைத்துண்பர் என்று கூறப்படுகின்றது.

மண்புனை இஞ்சி மதின்கடந்து அல்லது உண்குவம் அல்லேம் புகாவெனக் கூறி

-பதிற்றுப்பத்து 58; 6-7

சேரருடைய யானைப் படையும் ஆற்றல் வாய்ந்த தாயிருந்தது. மேக முழக்கங்கேட்டாலுங்கூடப் போர்