பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து I03

பேரன்பு, அமுக்கும் மனப்பான்மை, கொடுமை ஆகிய பண்புகள் மன்னர்கள் தவிர்க்கத்தக்கன என்று அறிவுரை கூறியுள்ளார்.

சினனே காமம் கழிகண்ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் தீதுசேண் இகங்து நன்றுமிகப் புரிந்து

-பதிற்றுப்பத்து 22: 1-9

ஒவ்வொரு பத்தின் முடிவிலும் ஒரு பதிகம் காணப்படு கின்றது. சில பதிகங்களிற் காணப்படும் செய்திகள் நுலி னுள்ளே அமைந்த பாடற் செய்திகளோடு பொருந்தி வரவில்லை. பதிற்றுப்பத்தின் சில தொடர்கள் அப்படியே சிலப்பதிகாரத்தில் பயின்று வந்திருக்கக் காணலாம். பதிற் றுப்பத்தின் காலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம். சங்ககாலச் சேரர் வரலாற்றை அறியப் பெரிதும் துணை செய்வது பதிற்றுப்பத்தேயாகும்.