பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தை அடுத்துப் ‘பரிபாடல் அமைகின்றது. இந்நூல் ஓங்கு பரிபாடல் எனும் அடைமொழியால் குறிப்பிடப் படுகின்றது. பரிபாடல் எனும் பாவினத்தால் ஆகிய பாக்களின் தொகுதி ஆதலின் இந் நூலுக்குப் பரிபாடல் என்று பெய ராயிற்று.பரிபாடலில் அமைந்துள்ள பாக்கள் பண்ணமைதி யோடு பொருந்தியவையாகும். பக்தியோடு மக்கள் மனமுருகிப் பாட உறுதுணையாக அமையும் வகையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

பரிபாடலின் பழமை

தமிழ் முதற்காப்யியமாம் சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த தொல்லாசிரியராம் நல்லாசிரியர் அடியார்க்கு நல்லார், தம்முடைய சிலப்பதிகார உரைக்கண் முத்தமிழ்ச் சங்கம் முற்காலத்தில் முறையுற விளங்கிய வரலாற்றை விரித்துரைக்கும்பொழுது அவர்,

முதலுாழி யிறுதிக்கண் தென் மதுரையகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும், குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என்றிவருள் ளிட்ட நாலாயிரத்து நானுாற்று நாற்பத்