பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடல் 105

தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து .

என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்றே, கடைச்சங்க காலத் தனிபெரும் புலவர் நக்கீரனார். தாம் வகுத்த இறை யனார்களவியலுரையுள், முதற் சங்கப் புலவர்களுள் ஒரு வராகக் கீரந்தையார்’ என்பவரைக் குறிப்பிடுகின்றார். அக்கீரந்தையார் பாடியதாக ஒரு பாடல் பரிபாடலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பரிபாடலை இதுகொண்டு முதற் சங்கத்தைச் சார்ந்த நூல் என்று நுவலமுடியாது. ஏனென்றால், மாமதுரையிலே திருப்பரங்குன்றமும், மாலிருங்குன்றமும், வையை ஆறும் பரிபாடலில் பல இடங்களில் பரக்கப்பேசப்படுகின்ற காரணத்தால், பரி பாடல் கடைச்சங்க நூல் என்றே முடிவுகட்டலாம். பரி பாடல் எனும் ‘பா’ அமைப்பு முதற் சங்க காலத்தையே சார்ந்து விளங்கிற்று எனக்கொண்டாலும், எண்ணற்ற பரிபாடற் செய்யுட்கள் அன்று இயற்றப்பட்டிருந்தாலும் இன்று அவை அனைத்தும் நமக்குக் கிடைக்காமை நம் முடைய நற்பேறின் மையேயாகும்.

எழுபது பரிபாடல்

பரிபாடல்களில் அமைந்துள்ள பாடல்களின் எண் னிக்கை அந்நூல் தொகுக்கப்பெற்ற காலத்தில் எழுபதாக இருந்தது என்பதனைப் பின்வரும் பழம்பாடல் உணர்த்தும்.

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று-மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான் கென்ப செய்ய பரிபாடல் திறம்.