பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 06 பாட்டும் தொகையும்

ஆயினும் இந்நாளில் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடலின் எண்ணிக்கை இருபத்திரண்டு மட்டுமேயாகும் மேலும், இரண்டு பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மேற்கோள் செய்யுட்களிலிருந்து கிடைத்தன. ஆக, இரு பத்துநான்கு பாடல்களை முழுவையாகக் காணுகின்றோம். மேலும் சில பாடற்பகுதிகளும் கிடைத்துள்ளள.

அமைப்பு முறை

பரிபாடலில் நமக்கு இப்போது கிடைத்துள்ள இவ் இருபத்துநான்கு பாடல்களையும் காணும்பொழுது இந் நூலின் அமைப்புமுறை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. காலப்பழமை கருதியோ அல்லது ஆசிரியர்களை யொட்டியோ அல்லது பாடற்குரிய தெய்வங்களை யொட்டியோ இப் பரிபாடல் தொகுக்கப்பெற்றதாகக் கருத இயலாது. பரிபாடலில் அமைந்துள்ள பண்களின் அமைதி கருதியே பரிபாடலின் அமைப்புமுறை அமைந்துள் ளதனை நாம் உணரலாம். பரிபாடலின் முதல் பன்னி ரண்டு பாடல்கள் ‘பாலை யாழ்’ப் பண்ணில் அமைந்துள் ளன. அடுத்து வரும் ஐந்து பரிபாடல்கள் நோதிறப் பண் னில் அமைந்துள்ளன. அடுத்து வரும் நான்கு பரிபாடல்கள் காந்தாரப் பண்ணில் அமைந்துள்ளன. இறுதிப் பாடலின் பண் இன்னதெனத் தெரியவில்லை. ஆனால் அந்த இறுதிப் பாடலின் பண் காந்தாரம் என்பதை நாம் ஊகிக் கலாம். இப் பண்களை அமைத்த இசை ஆசிரியர்களுள் பத்துப்பாடல்களுக்கு நல்லச்சுதனார் இசையமைத்துள் ளார் என்பதை அறிய வருகிறோம். இசை மரபினால் பரி பாடல் இசையைக் காத்துவந்தார்கள் என்பதும், அவர்கள் காத்த பரிபாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன என்பதும் விழாக்காலங்களில் வந்து கூடும் பெருமக்களை மகிழ்விக்க இசையுடன் பொருந்திய இனிய பரிபாடலை அவர்கள் பாடினார்கள் என்பதும் இங்கே விளங்கும்.