பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடல் 107

மதுரை பற்றிய குறிப்பு

பரிபாடல் மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும், வனப்பும், காப்பும் தந்த வையை ஆற்றையும், மதுரையைச்சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும், மதுரையை அடுத்துள்ன திருமாலிருங் குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும், கொற்றவை தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்னன. பிற தொகை நூற்களைப் போலன்றிக் தமிழ்நாட்டின் பகுதி களையெல்லாம் கொண்டு எழுந்த செய்யுள்களாக அல்லா மல், மதுரை நகரரையும், மதுரையையொட்டி ஒடுகின்ற வையை ஆற்றையும், திருபரங்குன்றத்தையும், திருமாலிருங் குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதனால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் என இனங்கண்டு தெளியலாம்.

பரிபாடல் அகமும் புறமுமான இரு செய்திகளையும் கொண்டு அமைந்துள்ள நூாலாகும். ஏனென்றால், இந்நூல் ஐந்தினைப் பொருட்களைக் கொண்டு அமையா மல் தெய்வவணக்கப் பாடல்களாகவே அமைந்துள்ளன என்றும் கூறுவர். அதற்குக் காரணம், குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகனும், முல்லைக்குரிய தெய்வம் திருமாலும், பாலைக்குரிய தெய்வம கொற்றவை எனும் காடுகிழாளும், மருதத்திற்குரிய தெய்வம் மதுரை மா தெய்வமும். நெய் தலுக்கு வையையாகிய நீர்த் தெய்வமும் எனக்கொண்டு இந்நூல் எழுந்துள்ளது என்பர். வையை பற்றி எழுந் துள்ள பாடல்கள் அதனை ஆறாகக்கொண்டு அதன் அழகை வியந்து போற்றாமல், பரவிப்போற்றுகின்ற வகையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

பரிபாடல் இலக்கணம்

‘இது தொகைநிலை வகையால் ‘பா’ என்று சொல்லப் படும் இலக்கணமின்றி, அனைத்துப் பாவிற்கும் பொது வாக நிலைக்கக் கூடியதாய், இன்பப்பொருளைப் பற்றிக்