பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாட்டும் தொகையும்

பரிபாடலில் இனிய சில பகுதிகள் வருமாறு

திருப்பரங்குன்றத்தில் முருக அடியார்கள் முருகப் பெருமானிடம் வேண்டுவன பின்வருமாறு :

................................. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒளிதாரோயே

-பரிபாடல் 5. 78-81

திருமாலைப் பற்றிவரும் பாடல் ஒன்றில்,

யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! எனும் பகுதி ஆழ்ந்து நோக்கத் தக்கதாகும். அதேபோல,

தமிழ் வையைத் தண்ணம் புனல் எனும் பகுதி வையை ஆற்றைத் தமிழோடு இணைத்துப் பேசுகிறது.

எங்குமாய் எல்லாமாய் நிறைந்துள்ள திருமாலைப் பின் வருமாறு பரிபாடல் ஆசிரியர் குறிப்பிடுன்கிறார்.

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடுபோர் அண்ணால்! அவை அவை கொள்ளும் கருவியும் நீயே: முந்து யாம்கூறிய ஐந்தனுள்ளும், ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; இரண்டின் உணரும் வளியும் நீயே: மூன்றின் உணரும் தீயும் நீயே; நான்கின் உணரும் நீரும் நீயே, ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே, அதனால், நின்மருங்கின்று-மூ-ஏழ் உலகமும்,