பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடல் J II

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த காலமும், விசும்பும், காற்றொடு கனலும் தன் உரு உறழும் பாற்கடல் காப்பண், மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைகா அருந்தலைக் காண்பின் சேக்கைத் துளவம் சூடிய அறிதுயி லோனும்

-பரிபாடல் 13; 14-29 பிறிதோர் இடத்தில் திருமாலைப் பின்வருமாறு போற்று கின்றார்:

மாஅயோயே! மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே! தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், திதியின் சிறாரும், விதியின் மக்களும், மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், தாமா இருவரும், தருமனும், மடங்கலும், மூஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்மாயா வாய்மொழி உரைதர வலந்து: “வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,

எேன மொழியுமால், அந்தணர் அருமறை.

-பரிபாடல் 3; 1-14

மேலும், சாமவேதத்தின் தெளிந்த பொருளாகத் திருமால்

விளங்குவதனை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் காற்றம் கீ; கல்லினுழ் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; வெஞ்சுடர் ஒளியும் நீ: திங்களுள் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்