பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாட்டும் தொகையும்

உறையும் உறைவதும் இலையே; உண்மையும் மறவியில் சிறப்பின் மாயமார் அனையை, முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

-பரிபாடல் 3: 63-72

என்றும் குறிப்பிட்டிருப்பதை அறியலாம்.

செவ்வேளைப் பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது,

பாய் இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு, சேய் உயர் பிணி முகம் ஊர்ந்து, அமர்உழக்கி, தீஅழல துவைப்பத் திரிய விட்டெறிந்து நோயுடை நுடங்கு சூர்மா முதல்தடிந்து, வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்றுஉணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல், நாவல்.அம் தண்பொழில் வடமொழி ஆயிடை, குருகொடு பெயர் பெற்ற மால்வரை உடைத்து, மலை ஆற்றுப் படுத்த மூ-இரு கயந்தலை!

-பரிபாடல் 5: 1.10

என முடிப்பதனைப் பார்க்கலாம்.

இராமாயண அகலிகை பற்றிய குறிப்பு வருமாறு: ,இந்திரன், பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன்; சினன் உறக் கல்உரு ஒன்றிய படி இது என்று உரைசெய்-வோரும்.

-பரிபாடல் 19: 50-52

இவ்வாறு காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி மாயோனை யும் சேயோனையும் மனம் உருகிப் பாடியுள்ள பாடல் களாகப் பரிபாடல்கள் அமைந்துள்ளன என்பது நமக்குப் புலனாகிறது.