பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாட்டும் தொகையும்

கலிப்பா வெண்பா நடைத்து எனத் தொல்காப்பிய னார் சுட்டுவர். கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகள் கலிப்பாவிற்கு உரியனவாகும். இஃது இசைப்பாட்டு வகையைச் சார்ந்தது எனலாம்.

சங்கத்துச் சான்றோர் தொகுத்த கலிப்பாட்டுகள் நூற்றைம்பது எனப் பேராசிரியர் செய்யுளியலின் 149, 153, 154, 155, 160 ஆவது நூற்பாவுரைகளிலும், இறைய னார் அகப்பொருள் உரையாசிரியர் முதல் நூற்பாவின் உரையிலும், இந்நூலின் பாடல் எண் ணிக்கையினைப் புலப்படுததியுள்ளனர். சங்கத் தொகை நூல்களிற் சிதைவும் குறைவும் இன்றி, இன்று நூற்றைம்பது கலிப்பாடல்களும் கிடைப்பது தமிழ் மக்களின் தவப்பேறு எனலாம்.

சிவபெருமான் வாழ்த்தாக இடம் பெற்றுள்ள கடவுள் வாழ்த்துடன், பாலைக்கலி முப்பத்தைந்து பாடல்களும், குறிஞ்சிக்கலி இருபத்தொன்பது பாடல்களும், மருதக்கலி முப்பத்தைந்து பாடல்களும், முல்லைக்கலி பதினேழு பாடல்களும், நெய்தற்கலி முப்பத்து மூன்று பாடல்களும் கொண்டு கலித்தொகை விளங்குகின்றது. இவ்வைந்து பகுதிகளும் தனித்தனியே மருதக்கலி, முல்லைக்கலி, குறிஞ்சிக்கலி என வழங்கியதோடு மருதப்பாட்டு, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு என்றும் வழங்கியதாகப் பேராசிரியர் தம் உரையில் குறித்துள்ளார்.

மேலும், ஐந்திணைப் பகுதிகளையும் பாடிய புலவர் இன்னின்னார் என்பதனை விளக்கக் கீழ்வரும் பாட லொன்று தமிழில் வழங்குகின்றது.

பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி மருதன் இளங்ாகன் மருதம்; அருஞ்சோழன் நல்லுருத்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி, இந்நூலினைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றிய குறிப்பு யாண்டும் காணப்படவில்லை. உச்சிமேற் புலவர்