பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை 115

கொள் நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பிலிருந்து நெய்தற்கலியைப் பாடிய நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி, இத்தொகை நூலைத் தொகுத் தார் என்று கொள்ள இடம் ஏற்படுகின்றது.

கலித்தொகையின் ஒவ்வொரு பாடலின் கீழும் அவ்வப் பாடலுக்குரிய கூற்றுவிளக்கம் பற்றிய பழங்குறிப்புளது. சில பாடல்களின் குறிப்புகள் தொல்காப்பிய மேற்கோள் களுடன் மிக நீண்டும் செல்கின்றன. வேறு சில பாடல் களில் முன் பாடலுக்குரிய கூற்றே மீண்டும் இடம் பெற்றால், “இதுவும் அது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் இன்னார் கூற்று’ என்பது விளக்கமுறச் சுருங்கக் கூற்றுப் பற்றிய தலைப்பு இடம் பெற்றுள்ளது. தலைமகன், தலைமகள், தோழி முதலியோரது உரையாடல் அமைப்பில் வரும் பாடல்களில் மட்டும் உரையாடல் நிகழ்த்துவோரின் பெயர் விளங்கச் சிறு தலைப்புகள் அமைக்கப் பெற் றுள்ளன. கலித்தொகை முழுவதற்கும் நச்சினார்க்கினியரின் நல்லுரை உண்டு.

கலித்தொகையை முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களாவர். இப்பதிப்பு கி. பி. 1887 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் இப் பதிப்பில் நல்லந்துவனார் கலித்தொகை’ என்றே குறித்துள்ளமையினை நோக்கக் கலித்தொகை முழுமைக் கும் ஆசிரியராக இவர் நல்லந்துவனாரையே கொண்டார் என்று நினைக்க வேண்டியுளது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களும் தாம் எழுதிய தமிழ் மொழி இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலில், கலித்தொகையினை ‘ஐவர் பாடியதாகக் கூறும் தனிப் பாடல் மிகப் பிற்பட்ட காலத்தது என்றும், நூலின் அமைப்பு, நடை, போக்கு முதலிய சில தனி இயல்புகளைக்