பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ió பாட்டும் தொகையும்

கவனித்தாலும் இஃது ஒரே ஆசிரியர் இயற்றியதாகும் என்றே கொள்ளத்தக்கதாயுள்ளது’ என்றும், ‘நெய்தற் பகுதியின் ஆசிரியராகக் குறிக்கப் பெற்ற நல்லந்துவனாரே ஏனைய பகுதிகளுக்கும் ஆசிரியராக இருத்தல் கூடும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் (பக்கங்கள் 26-27). ஆயினும் ஐந்து கலிகளின் ஆசிரியர் ஐவர் எனத் தனித்தனியே பெயர் சுட்டப் பெறும் பழம்பாடல் ஒர் உண்மையின் அடிப்படை யில்தான் தொன்னெடுங்காலமாக நிலவி வந்திருக்க வேண்டும் என்று கொண்டு, வெவ்வேறு ஆசிரியர்களே ஒவ்வொரு கலியின் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்று கொள்வதே நேரிதாகப்படுகின்றது.

முதலாவது பாலைக்கலியின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆவர். இவர் பாலை நிலத்தை வருணிப் பதில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்கிறார் (பாட்டு 9, 12). உவமைகளைக் கையாள்வதிலும் இவருக்கு நிகர் இவராகவே விளங்குகின்றார். வறியவன் இளமை போல் வாடிய சினை’ என்றும் சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்க்கு நிழல் இன்றி என்றும்,

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி

-கலித்தொகை 10: 1-2

“கூடிவாழ்ந்து குன்று பிரிந்து போனால் அது குடி மகிழ்ந்து கீழே போட்ட பூவிற்குச் சமம்’ என்றும் இவர் கூறும் உவமை நயங்களை ஒர்க. காட்டின் கவர்த்த வழி களில் வழிச்செல்வோரிடம் எடுத்துக்கொள்ளத் தக்க பொருள் இல்லையென்றாலும் ஆறலை கள்வர்கள் மறைந் திருந்து வழிச்செல்வோர் மேல் நஞ்சு தோய்ந்த அம்பினைப் பாய்ச்சி, அவர்கள் துடிதுடித்து இறப்பதைப் பார்த்து மகிழ்கிறார்கள்.