பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை I 17

அற்றம் பார்த்தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுவர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ளாரிடை

-கலித்தொகை 4: 3-6 எனற செய்தி பாலை நிலத்தின் பயணக் கொடுமையை மிகுவிப்பதாயுளது.

துன்பம் துணையாக நாடின், அது வல்லது: இன்பமும் உண்டோ எமக்கு

என்றும் சில சந்தனக் கட்டை தம்மைத் தேய்த்துப் பூசிக் கொள்பவருக்கே மணம் ஊட்டுவது போல, ஒரு வீட்டிற் பிறந்த பெண், அப்பிறந்த வீட்டிலன்றிப் புகுந்த வீட்டிற் சென்று தான் மணம் பரப்ப வேண்டும்’ என்றும்,

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே

-கலித்தொகை 9: 12-14

‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆனாலும் மனத்தால் ஒன்றுபட்டவர் வாழ்க்கையே வாழ்க்கை’ என்றும், ‘கழிந்து போன இளமையினை ஒருநாளும் ஒருவராலும் மீட்டுத் தர முடியாது’ என்றும்,

இளமையுங் காமமும் ஒராங்குப் பெற்றார் வறுமை விழைதக்க துண்டோ வுளங்ாள் ஒரோஒகை தம்முட் டழிஇ யொரோ கை ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற இளமை தரற்கு

-கலித்தொகை 18:7-12

அரிய கருத்துகள் பாலைக் கலியுள் உள.