பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாட்டும் தொகையும்

வற்றிய பாலையிலும் வற்றாத அன்புக் காட்சிகளாகப் பெண் யானைக்கு நீருட்டி விட்டுப் பின்னர் மிகுந்ததைக் குடிக்கும் ஆண் யானையும், பெண் புறாவின் கோ-ை வெப்பம் வருத்தம் தீரத் தன் மென் சிறகால் விசி வெப்பத்தைத் தணிவிக்கும் ஆண் புறாவும், தன் நிழலைத் தந்து தன் பெண் மானின் கதிர் வெம்மை போக்கும் ஆண்மானின் அன்பு உள்ளமும் காட்டப்படுகின்றன.

அடிதாங்கு வளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கணங்குழாஅய் காடென்றா ரக்காட்டுட் டுடியடிக் கயங்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே, இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற் றுன்புறுஉங் தகையவே காடென்றா ரக்காட்டு ளன்பு கொண் மடப்பெடை யசைஇ வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே,

கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலாற் றுன்னரூஉக் தகையவே காடென்றா ரக்காட்டு ளின்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு

முரைத்தனரே

-கலித்தொகை 11: 6-17

‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்பர். குறிஞ்சிக் கலியைப் பாடியவர் கபிலர். குறிஞ்சிக்கலிப் பாடல்களில் பல நாடகப் போக்கில் அதமந்திருக்கக் காணலாம். கயமலர் உண்கணாய் காணாய் ஒருவன்’ என்ற முதற் பாடலும், “சுடர்த் தொடீஇ கேளாய்’ என்ற பதினைந்தாவது பாடலும், முது பார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து பற்றிப் பேசும் குறிஞ்சிக் கலியின் இறுதிப் பாடலும் (29) நாடகப் போக்கில் நன்கமைந்த பாடல்களாகும். இராவணனைப் பற்றிய குறிப்பு இரண்டாவது பாடலில்