பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை 119

இடம் பெற்றிருக்கக் காணலாம். தலைமகன் முன்னிரவில் தலைமகளைச் சந்திக்க வரும்பொழுது நீரற்ற புலமாகவும், பொருளில்லான் இளமையாகவும், அறஞ்சாரான் மூப்பாக வும் விளங்கியவள் அவன் தன் த்ண்ணளியால் வைகறையில் கார் பெற்ற புலமாகவும், அருள் வல்லான் ஆக்கமாகவும், திறஞ்சேர்ந்தான் செல்வமாகவும் திகழ்வதனைக் கபிலர் நன்கு காட்டுவர்.

ஆரிடை யென்னாய்ரீ அரவஞ்சாய் வந்தக்கால் நீரற்ற புலமேபோற் புல்லென்றாள் வைகறை கார்பெற்ற புலமேபோற் கவின் பெறும் அக்கவின் தீராமற் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக்காண்

==

இருளிடை யென்னாய்ரீ இரவஞ்சாய் வந்தக்கால் பொருளில் லான் இளமைபோற் புல்லென்றாள் வைகறை அருள் வல்லான் ஆக்கம்போல் அணி பெறும் அவ்வணி தெருளாமல் காப்பதோர் திறனுண்டேல்உரைத்தைக்காண் -கலித்தொகை 38: 10-17

தன்னைக் காமர் கடும்புனலிலிருந்து காப்பாற்றிய காதலனையே கணவனாக மனத்தில் முடிவு செய்து கொண்ட அளவில் அப்பெண், அருமழை தரல்வேண்டின் தருகி ற்கும் பெருமையள்’ ஆகி விட்டாள். தலைவன் தலைவியைப் பிரியமாட்டேன் எனச் சூளுரைத்துவிட்டு, அச்சூள் பொய்த்தால், அச்செயல் திங்களுள் தீத் தோன்றிய தாகவும், நிழற்கயத்து நீருள் குவளை வெந்ததாகவும், விசும்பில் சுடருள் இருள் தோன்றியதாகவும் கருதப்படும். குன்றகல் நன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின் திங்களுள் தீத்தோன்றி யற்று. ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்து நீருட் குவளை வெங் தற்று. தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பிற் சுடருள் இருள் தோன்றி யற்று.

-கலித்தொகை 41: 23-24: 30-31; 37-38