பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாட்டும் தொகையும்

அவன் வரைந்து கொள்ளுங்கால் தலைவியின் மேனி யில் தோன்றிய பசலை நோய் கதிரவன் முன் மாயும் இருளாகி விடும்.

ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்ததென் ஆயிழை மேனிப் பசப்பு

-கலித்தொகை 42: 31-32

மருதக்கலி பாடியவர் புலவர் மருதன் இளநாகனார் ஆவர். மதுரையின் சிறப்பும் வையையாற்றின் வளமும் மருதக் கலியில் இடம் பெற்றுள்ளன. மதுரைக்கு வையை நீர்ப் பகையுண்டே யொழியப் போர்ப்பகை கிடையாது.

நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்

-கலித்தொகை 67: 23-25

மதுரையில் புலன் நா உழவர்கள் புதுமொழி கூட்டுண்ணுகிறார்கள்.

முதுமொழி நீராப் புலனா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனலூர

-கலித்தொகை 68: 4-5

‘வாடிய பூவொடு வாரல் எம் மனை?’ எனக் கூறும் மதுகையுடைய தலைவி, ‘பரத்த’ என்றும் தகாத வொழுக்கம் மேற்கொள்ளும் தலைவனைக் குறிப்பிடுகின் றாள். o

வாடிய பூவொடு வாரலெம் மனை என ஊடி யிருப்பே னாயின் நீடாது

மாய மகிழ்நன் பரத்தைமை

-கலித்தொகை 75 : 18-32