பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை 12.I

‘முந்தையிருந்து மகன் செய்த நோய்த்தலை வெந்த புண்வேல் எறிந்தற்றால்’ என்ற உவமைஉன்னுந்தொறும் நயம் பயப்பதாகும்.

முந்தை யிருந்து மகன் செய்த நோய்த்தலை வெந்தபுண் வேலெறிந் தற்றால் வடுவொடு தங்தையும் வந்து நிலை

-கலித்தொகை 83: 29-31

“நீயும் தவறிலை; நின் கை இது தந்த எழில் உண்கண் அவளும் தவறிலள்...யானே தவறுடையேன்” எனத் தன் னையே நொந்து கொள்ளும் தலைவியின் பொருமல் இரங்கத்தக்கது.

நீயும் தவறிலை நின்கை இதுதந்த பூவெழி லுண்கண் அவளுங் தவறிலள் வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார் மேனின்றும் எள்ளி இது இவன் கைத்தந்தாள் தான்யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடையேன்.

-கலித்தொகை 84 : 36-41

சோழன் நல்லுருத்திரன் பாடியது முல்லைக்கலியாகும். துச்சாதனனைத் தொலைத்த வீமனின் வீரம் முல்லைக் கலியின் முதற்பாடலில் இடம் பெற்றுள்ளது.

அஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியான்

நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண், தன்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்

-கலித்தொகை 101: 18-20

ஏறு தழுவுதல் என்னும் முல்லை நில வழக்கம் பல பாடல்களில் கிளத்தப்பட்டுள்ளது. ஏறடக்கித் தான்