பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை ಸ್ಥಿತಿ - o - ே

படுசுடர் மாலையொடு பைதனோ யுழப்பாளைக் குடிபுறத் தரத்தோம்புஞ் செங்கோலின் வியன்தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் “ தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே

-கலித்தொகை 130: 18-21

மாலைநேரத்தில் இடையர் புல்லாங்குழல் இசைக்கத் தலைவியின் காதல் நோய் கைம்மிகுகிறது. -

..............................இம்மாலை கோவலர் தீங்குழல் இணைய வரோஎன் பூவெழி னுண்கண் புலம்புகொண் டினையும்

-கலித்தொகை 130: 14-16

நிரைவளை நெகிழ்ந்து கை முன் இறையினின்றும் கழன்று விழுகின்றது.

இறைவரை நில்லா வளையள் இவட்கினிப் பிறையேர் சுடர்நுதற் பசலை மறையச் செல்லுt மணந்தனை விடினே.

-கலித்தொகை 125: 22-25

நெய்தல் கலியின் பாடலொன்று (16) ஆற்றுதல், போற்றுதல், பண்பு முதலானவற்றிற்கு விளக்கம் தருகின்றது.

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை, பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல், அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை; அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்;