பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாட்டும் தொகையும்

பெயர் எய்தியுள்ளதை நோக்க, இது செய்யுளானன்றிப் பொருட் சிறப்பானும் நீண்டுளதெனும் முன்னோர்தம் குறிப்புப் புலனாகக் காணலாம். அது மட்டுமின்றிக் குறுந் தொகை என வழங்கப்படும் நூலின்கண் அமைந்துள்ள சில பாடல்களில் முதல் ,கருப்பொருள்கள் விளக்கமுறக் காணக் கூடியனவாய் இல்லை. ஐங்குறுறுாற்றில் முதல் கருப்பொருள்கள் ஒரளவே இடம் பெற்றுள்ளன. ஆனால் அகநானூற்றில் முதல் கரு உரிப்பொருள்கள் ஆகிய மூன்றும் சி ற க் க அமைந்திருப்பதனைக் கற்றோர் காண முடியும். மிகவும் விரிந்த நிலையில் முதற்பொருளும் கருப்பொருளும் அமைந்து, உரிப் பொருளாற் சிறப்புற்றுத் துலங்கும் பெற்றி வாய்ந்த பாடல்களை எடுத்துக்காட்ட வந்த தொல்காப்பிய உரை யாசிரியர்களாகிய இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளுக்கும் அகநானூற்றிலிருந்தே பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். தொல்காப்பியத்தின் பிறிதோர் உரையாசிரியராம் பேராசிரியரும் தம் உரைக்கண் பிற அகத்திணை கூறும் நூற்களினும் அகநானூற்றிற்குத் தலைமையிடம் தந்து குறிப்பிட்டுள்ளமையினையும், ‘அகம் என்னும் பெயரானே அகநானுாற்றினை வழங்கியுள்ளமை யையும் காணலாம.

எட்டுத்தொகை நூற்களில் அடியளவால் நீண்டுள்ள நூல் அகநானூறு ஆகும். ஒன்பதடிச் சிற்றெல்லையும் முப்பத்தோரடிப் பேரெல்லையும் கொண்ட இந்நூல் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் நூற்றி ருபது பாடல்களைக் கொண்ட தொகுதி களிற்றியானை நிரை என்றும், அடுத்த நூற்றெண்பது பாடல்களைத் கொண்ட தொகுதி மணிமிடை பவளம்’ என்றும், இறுதி நூறு பாடல்களைக் கொண்ட தொகுதி “நித்திலக் கோவை’ என்றும் வழங்கப் பெறுகின்றது. நூலின் இறுதியிற் காணப்பெறும் நின்ற நீதி’ என்று தொடங்கும்