பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகநானுாறு 127

பாயிரச் செய்யுளை அடுத்துள்ள உரைநடைச் சொற்றொ டர்களுள், இவ்வாறு அகநானுாற்றின் பாடல்களை மூன்று பகுதிகளாக்கிப் பெயரிட்டு வழங்குதற்குக் காரணங்கள் கூறப் பெற்றிருப்பினும், அவை விளக்கமான காரணங்க ளாகப் புலப்படவில்லை. ஆயினும் ஒருவாறு இவ்வாறு பெயர் அமைந்ததற்குரிய காரணத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது. நெடியவாகி நிமிர்ந்தொழுகும் அடிகளைக்’ கொண்டு செருக்குற்றுச் செல்லும்-பாட்டின் நடையும் பொருட் சிறப்பும், நன்கு விளக்கமுறும் பகுதி ‘களிற்று யானை நிரை ஆகும். பாட்டும் பொருளும் தம்முள் செறிந்து விளங்காமல் மணியும் பவளமும் மிடைந்தாற் போல ஒவ்வாமை காட்டுவது மணிமிடை பவளம்’ என் னும் பகுதியாகும்.குளிர்ச்சியும் ஒளியும் உடைய நன்முத்தின் ஒளியெனத் திகழ்ந்து பாட்டும் பொருளும் தம்முள் பொருந் துதல் காட்டும் பகுதி நித்திலக் கோவை ஆகும். அடுத்து. குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளிலும் எய்தும் பிரிவு நிலைகளும், அவற்றைக் கிளத்துமுகத்தான் வரும் அன்பு வெளிப்பாடும், வேறு எந் நூலுள்ளும் சிறக்கக் காண முடியாத அளவிற்கு அகநானுாற்றில் அமைந்திருத்தல் இந் நூலின் தனிச் சிறப்பாகும். அகப்பொருள் கூறும் நூற் களுள் இதுவே காலத்தானும், முற்பட்டு ஒளிர வேண்டும் qTalil LIIT

இந்நூலைப் பாடிய புலவர் பெருமக்களின் தொகை நூற்று நாற்பத்தைந்தாகும். மதுரை உப்பூரி குடி கிழார் மகனார் உருத்திர சன்மனார் பல்வேறு புலவர்கள் பல்வேறு சமயங்களிற் பாடிய பாடல்களைத் தொகுத்தார். இத்தொகுப்பு முயற்சிக்கு ஆதரவு தந்த மன்னன் பாண்டி யன் உக்கிரப் பெருவழுதியாவன். முதலாவது அமையும் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவர். இவர் பிற்காலத்தவர் என்பர்.

அகநானுாற்றுப் பாடல்கள் ஒர் ஒழுங்குமுறையினை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. 1, 3,