பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகநானுாறு 129

களைத் தேர்ந்தெடுக்கும் முறை ஒரு பாடலில் குறிப்பிடப் பெறுகிறது.

குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்க் கயிறு பிணிக் குழிசி ஒலை கொண்மார் பொறி கண் டழிக்கும் ஆவண மாக்களின்

-அகநானூறு 77; 6-8

குழந்தைப் பேற்றின் சிறப்பினைச் சில பாடல்கள் செப்புகின்றன.

இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின்று எய்துப செறுகரும் விழையுஞ் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே யாகுதல் வாய்ந்தனம்

- அகநானூறு 66: 1-6

பழந்தமிழர் திருமண முறையினைப் பாடல் ஒன்று முறையுற மொழிகின்றது.

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால் தண் பெரும் பங்தர்த் தருமணல் ளுெமிரி மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக் கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

шт.—9