பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாட்டும் தொகையும்

புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடிக் கற்பின் வழாஅ. நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகஎன

-அகநானூறு 86: 1-14

புலவர் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நன் மதிப்பு, சில பாடல்களால் தெரிய வருகின்றன. ஆதிமந்தி என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சி யினை அகநானூறு அழகுறப் படம்பிடித்துக் காட்டுகிறது.

கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிங்த வனப்பமை தெரியல் சுளியலம் பொருங்னைக் காண்டி ரோவென ஆதி மந்தி பேதுற் றினைய

-அகநானூறு 76: 7-10 கிளியை முன் கையில் வைத்துக்கொண்டு பொருள் வயிற்பிரிந்து சென்ற தலைவன் வருவானா என வினவும் தலைவியின் சொற்சித்திரம் பொற்சித்திரமாக வளங்கு கின்றது.

பசை கொல் மெல்விரல் பெருந்தோள், புலைத்தி துறைவிட்டன்ன துர்மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற் செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி, இன்றுவரல் உரைமோ, சென்றி.சினோர் திறத்து என இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாணுடை அளினது மாண்கலம் பெறவே

- அகநானூறு 34: 11-18

வினைமுடித்து வண்டுகளின் காதல் வாழ்க்கைக்கு, இடையூறு ஏற்படுத்தாமல் தேரின் மணிகளைப் பிணித்து