பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகநானு று 13 I

விட்டுவரும் தலைவனின் வரவு ஒரு பாடலில் சுட்டப் படுகிறது.

கார் செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம் பார்த் தன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதித்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மான்விளனத் தேரன் உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்

-அகநானூறு 4:7-13

இதிகாசக் கதை நிகழ்ச்சிகள் சில பாடல்களில் இடம் பெறுகின்றன. தோழியின் சொல்லாற்றும் திறமும், சூழ்ச்சி வகையும், வரைவு கடாவும் திறமும் விளக்கமுறப் பேசப்படுகின்றன. தலைவனின் கடமை நெஞ்சம் காட் டப்படுகின்றது. இவ்வாறு இன்னோரன்ன பல சிறப்புகள் அகநாறுற்றில் அழகுற அமைந்து விளங்கக் காணலாம்.

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது முதல் 90 பாடல்களுக்கு மட்டும் குறிப்புரையாக இருக்கின்றது. அடுத்து. 70 பாடல்களுக்கு அகநானுாற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபால ஐயங்கார் உரை எழுதியிருக்கிறார். தஞ்சை நாவலர் ந.மு. வேங்கட சாமி நாட்டாரவர்களும், கரந்தைக்கவியரசு ரா. வேங்க

டாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து நூல் முழுமைக் கும் உரை கண்டுள்ளனர். இவ்வாறே பெருமழைப்புலவர் சோ சுந்தரனாரும் அகநானுாறு முழுமைக்கும் உரை

எழுதியுள்ளார்.