பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புறநானூறு முன்னுரை

தமிழிலக்கியப் பரப்பில் இன்று நமக்கு கிடைக்கும் நூல்களில் எட்டுத்தொகை மிகப்பழமையான தொகை நூலாகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற் றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புற நானுாறு ஆகிய நூல்கள் எட்டுத்தொகை எனப்படும். இதில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட் டுள்ளன.

பலரால் இயற்றப்பெற்ற செய்யுட்களைக் கொண்டு ஏறத்தாழ கி. மு.60-இல் தொகுக்கப்பட்ட அந்தாலஜி’ (Anthology) என்று கூறப்படும் தொகை நூல் கிரேக்க மொழியில் இருப்பது இங்கு நினைக்க தக்கது.

தமிழிலக்கிய பரப்பில் பலதொகை நூல்கள் அமைந் துள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பலவும். தனிப் பாடல் திரட் டு போன்ற பலவும் தொகை நூல்களாகவே அமைந்துள்ளன.

தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளின் மூலம் நெடுந் தொகை முதலாக எட்டுத்தொகை நூல்களையெண்ணும் முறையிருந்தது என்று எண்ண இடம் ஏற்படுகின்றது. நெடுந்தொகை முதலாகிய தொகை எட்டும்’ என்று அவர்கள் குறிக்கின்றனர். பழம்பாடல் ஒன்று நற்றிணை முதலாகத் தொடங்குகின்றது.