பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பாட்டும் தொகையும்

மன்னரும் அவர் படையும் காக்கவேண்டிய நல்ல அறநெறி களையும், மாற்று வேந்தன் அறத்தாறு வழுவி அவலம் புரிந்தவழி ஆற்ற வேண்டிய செயல்களையும் விளக்கமாகப் புறம் எடுத்துக்காட்டுகிறது; இன்னும் மக்கள் வாழ்வில் புரியும் நலங்கேடுகளையும் பிறவற்றையும் விளக்கிக் காட்டு கின்றது’ என்பது பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்கள் தரும் விளக்கமாகும். (கவிதையும் வாழ்க்கையும்; பக்கம்: 312 - 314)

சுருங்கச்சொன்னால் காதலல்லாத பிறவெல்லாம் புறத் தில் அடங்கும். வாழ்வின் இரு பகுதிகளில் காதல் தவிர்த்த மற்ற எல்லா வகை நிகழ்ச்சிகளும் புறத்தில் அடங்கும். புறம் வாழ்க்கைப் பகுதியின் பரந்த விரிவைப் படம் பிடித்துக் காட்டும்.

அகத்திணை ஒன்றுக்குப் புறத்திணை வகுத்து, இரண் டிற்குமுள்ள தொடர்பைத் தொல்காப்பியனார் விரித்துக் காட்டுவார்.

அகத்திணையை மறந்த புறத்திணை இல்லை என்று கூறுவார் போலப் புறத்திணையியலின் முதல் நூற்பாவி லேயே, அகத்திணை இலக்கணத்தைத் தெளிவாக உணர்ந் தோர் புறத்திணை இலக்கணத்தைத் திறம்பட உணர்த்துங் கால், வெட்சி என்னும் புறத்தினை குறிஞ்சி என்னும் அகத்திணைப் புறனாக அமையும் என்ற பொருளில்,

அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே

-தொல்காப்பியம்; புறத்திணையியல், !

என்று தொல்காப்பியனார் கூறுகிறார்.