பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

9



மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப் பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குருஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு ஆமா கல்லேறு சிலைப்பச் சேண் நின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே

-திருமுருகாற்றுப்படை : 296-317

திருமுருகாற்றுப்படையின் தொடக்கமே நெஞ்சை அள்ளுவதாக உளது. உலகம் மகிழுமாறு கதிரவன் கடலின்மேல் தோன்றுகிறான். செஞ்ஞாயிறு நீலக்கடலில் தோன்றுவதுபோலச் செவ்வொளி வீசித் திகழும் முருகன் நீலமயில் மீது கோலங்கொண்டு திகழ்வது போலுள்ளது. அடியவரைத் தாங்கும் அடிகள் அவனுடையவை; பகை வரை அழிக்கும் கைகள் அவனுடையவை. குற்றமற்ற கற்பினையுடைய தெய்வயானையின் கணவன் அவன். கார் காலத்தே மலரும் கடம்பமலர் மாலை புரளும் மார்பு அவனுடையதாகும்.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் -ாஅங்கு ஒவற இமைக்குஞ் சேண் விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடைய கோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோண் முகங்த கமஞ்சூன் மாமழை வாள் போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூங் தண்டார் புரளும் மார்பினன்.

-திருமுருகாற்றுப்படை : 1-11