பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாறு II. 135

ஏழா? பன்னிரண்டா?

அகத்திணைக்கும் புறத்திணைக்கும் முதல், கருப் பொருள்கள் ஒன்றாகவே அமைதலும், உரிப்பொருள் மட்டும் மாறியமைதலும் இங்கு நோக்கத்தக்கன.

வாழ்க்கையில் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய பங்கு தந்து போற்றிய நுட்பத்தை உணராது, பிற் காலத்தோர் அகத்தைக் காட்டிலும் புறத்திற்கே முதன்மை தரப்பட்ட தாகத் தவறாக உணர்ந்து அல்லற்பட்டனர். அதனில் புறத்திணைகள் பன்னிரண்டு என வகுத்தனர். நிரைகவர் தலாகிய வெட்சி, நிரை மீட்க முயலும் கரந்தை, பகைவர் நாடுகொள்ள எழும் படைச் செலவாகிய வஞ்சி, அவ்வாறு படையெடுத்து வருவோரை எதிர்த்து நிற்கும் காஞ்சி, மதிலை வளைத்தலாகிய உழிஞை, மதிலைக் காக்கும் நொச்சி, இருபடையினரும் போர்புரியும் தும்பை, போரில் வெல்லும் வாகை, புகழ்பாடும் பாடாண், இவைகட்குப் பொதுவாயுள்ள பொதுவியல். ஒருதலைப் பற்றாகிய கைக்கிளை, பொருந்தாக் காமமாகிய பெருந்திணை ஆகிய வையே அப்பன்னிரண்டு புறத்திணைகள். இவ்வாறு வகுப்பது இதற்கு இது புறம்’ என்று வகுக்கும் தொல் காப்பியனார் கொள்கைக்கு மாறுபட்டு நிற்பதால், முதல் ஏழு திணைகளைப் புறத்திணையென்றும், அடுத்த மூன்றைப் புறப்புறம் என்றும், இறுதியில் உள்ள இரண்டு திணைகளை அகப்புறமெனவும் அவர்கள் குறித்தனர். இவ் வாறு பகுக்கப்படட பகுப்பினை ஆராய்ந்த நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், ‘தினையனைத்தும் ஒன்றி லொன்றடங்கா. அகமும் புறமுமாயிருவேறு வகையா மெனக் கொண்ட பிறகு, திணை எதுவும் ஒன்று அகத்தது அன்றேல் புறத்தது எனப்படுதலன்றி, அகப்புறமாமென் றோர் புதுவகைப்படுத்தெண்னுவது பொய்பொய்யே யாவதன்றி, தனிப்பொய், பொய்ப்பொய், மெய்ப்பொய் என முத்திறப்படுமெனல் போலப் பொருளொடு பொருந்