பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாறு 1.37

தொகைகளுக்கு நூலாதலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டும் என்று உணர்க’

(தொல்காப்பியம்; புறத்தினையியல், 35 உரை)

இங்கே நச்சினார்க்கினியர் தாம் உதாரணமாக எடுத் துக்காட்டிய சில புறப்பாட்டுகளுக்கு (புறநானூறு 5,184) அந்நூலின் உரைகாரர் கொடுத்துள்ள ‘செவியறிவுறுாஉ’ என்னும் துறைக்கு மாறாக வாயுறை வாழ்த்து’ எனக் குறிப்பிட்டு, உரைகாரர் தொல்காப்பியத்தைப் பின்பற்றி உரைவகுத்திலர் எனக் கருதுகிறார்.

புறநானூறு

டாக்டர் போப்பையர் முதலிய மேலைநாட்டு அறிஞர்கள் மட்டுமன்றிப் பல தமிழ் அறிஞர்களை யும், வரலாற்றாசிரியர்களையும் தன் பால் திருப்பிய பெருமையும் புறநானுாற்றிற்குண்டு. இவ்வகையில் எட்டுத் தொகை நூல்களிலேயே ஒர் ஒப்பற்ற இடம் இந்நூலுக் குண்டு. இந்நூல் கிடைத்த பின்புதான் சங்கத்தமிழரின் சமுதாய வாழ்வு, அரசியல் மேன்மை, போர்த்திறம், உயர்ந்த மனப்பாங்கு, வாழ்க்கை அமைப்பு, நாகரிகம், பண்பாடு, தியாக வாழ்வு முதலிய பலப்பல துறைகளில் உண்மையொளி பாய்ந்தது; தெளிவும் பிறந்தது; அன்று அவர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், போர்க் கருவிகள் உடைகள், உணவு வகைகள், ஊர்திகள், உலோகங்கள், கொடிகள், மாலைகள், இசைக்கருவிகள், முதலியவற்றை அறிவதற்கான பல குறிப்புக்களைப் புற நானூறு தருகின்றது. அன்றிருந்த அரச மரபுகள், குறுநில மன்னர்கள், அவர்களுடைய தலைநகரங்கள், அவர்களி டையே நடந்த போர்கள், அவர்களுடைய வீரச்செயல்கள் முதலியவற்றை இந்நூலில் எங்கும் காணலாம். அன்று வழக்கிலிருந்த பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள், வாணிகம் தொழில்,முதலியவை பற்றியும் இந்நூல் பலபட விவரித்துக்