பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாறு I 39

யிட்டுள்ளார்கள். அத்துடன் சமூகவியல், மானிடவியல், அரசியல், உளவியல், புவியியல், வானவியல், தாவரவியல், விலங்கியல் முதலிய துறைகளில் நீண்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் புறநானுாற்றுத் புதையலில் செல்வங்கள் உள்ளன. புறநானூற்றின் சிறப்பை இவை உணர்த்தும்.

புறம் எனவும் புறப்பாட்டு எனவும் வழங்கப் பெறும் இந்நூலில் இன்று கிடைப்வை, கடவுள் வாழ்த்தொடு சேர்த்து 398 பாடல்கள்தாம். புறநானுாறுப்பாடல்கள் எந்த அடிப்படையில் தொகுக்கப்பெற்றன என்று இன்று விளங்கவில்லை. எனினும் அறிஞர் கி வா. ஜகந்நாதன் இதனை ஆராய முயன்று விளக்கியுள்ளார் “இரண்டாம் பாட்டு முதல் பதினாறாம் பாட்டு வரையில் சேரர், பாண்டியர், சோழர் என்ற முறையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன. அதன் பின் இம்மூவரும் ஒருமுறை யின்றிப் பாடப் பெறுகின்றனர். சோழர்களும் பா ண் டி ய ர் க ளு ேம பலபாடல்களாற் புகழப்படு கின்றனர். முதல் 85 பாடல்கள் முடிமன்னர்களாகிய இம்மூவரின் புகழைச் சொல்வன. அதன் பின் அதிகமான், பாரி, காரி, ஆய், பேகன், ஒரி முதலிய வள்ளல்களும் நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன் முதலிய வீரர் களும், பல வேளாளர்களும் புகழப்பெறுகின்றனர். 182 முதல் 185 பாடல்கள் வரை சில மன்னர்கள் தாமே இயற்றிய பாடல்கள் உள்ளன. 186 முதல் 195 வரையில் பொதுவகையில் அமைந்த தனிப்பாடல்களும், 196 முதல் 211 வரையில் பரிசில் துறை பற்றிய பாடல்களும், 212 முதல் 223 வரை கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த செயலைப்பற்றிய பாடல்களும் அமைந்துள்ளன. 217 முதல் 256 முடியக் கையறுநிலையும் பிறவுமாகிய அவலச் சுவையமைந்த துறைப்பாடல்களையும், 257 முதல் ஒரு வரையறையின்றிப் பல புறத்துறையமைந்த செய்யுட் களையும் காணலாம். இடையிடையே பாடாண்பாட்டு, பாடாண்டிணை, காஞ்சித்திணை பற்றிய பாடல்கள் பல