பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாட்டும் தொகையும்

ஒருசேரக் காணப்படும். பொதுவாகப் புறநானுாப் பாடல் களின் தொகுப்புக்குரிய முறை இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்லவியலவில்லை’ என்பது அவர் விளக்கம். (புறநானுாறும் தமிழரும்: ப. 45-46)

பாடப்பட்டோர், பாடியோர், பாடப்பட்ட திணை, துறை அடிப்படையில் இப்பாகுபாடு அமைந்துள்ளது. எனினும், புறநானூற்றுப் பாடல்களின் தொகுப்பு ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் செய்யப்பட்டதாகத் தெரிய வில்லை. (இரா. தண்டாயுதம்: சங்க இலக்கியம்: (எட்டுத் தொகை, ப. 387-388)

157 புலவர்கள் பெயர்கள் மட்டும் இப்போது கிடைக்கின்றன.

வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க்கையென்பது உயரிய எண்ணங்களின் மேல் அமையும் கோட்டையென்பர். வாழ்க்கை வளம்பெற்ற தாகவும், அற உணர்வுடன் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்பது சங்கத்தமிழர் கொள்கை. புகழ்தான் வாழ்க்கை யின் உயரிய பொருள் எனக் கண்டனர். எல்லோரும் சகோதரர்கள் என எண்ணினர். உலகமே உறவு என்று எண்ணினர்.

கணியன் பூங்குன்றனார் பாடல் உலக உறவைக் கூறும்போது,

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் கன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது