பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:புறநானு று 141

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆர்உயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

-புறநானுாறு : 192 என்று உலகிலுள்ள அனைத்து ஊர்களும் நமது ஊரே, அனைவரும் நமது சுற்றத்தினரே. நமக்கு வரும் நல்லவை தீயவை யாவையும் விதிவழியால் வருவதன்றி நமக்குப் பிறர் தருபவையல்ல. சாதல் என்பது புதிதன்று; வாழ்வதும் இனிதன்று: மழையால் வீழும் அருவி ஆற்றுவழியில் செல்லும் தெப்பம் போல, உலகமும் அதன் முறைமை யிலேயே செல்லும். இதை நமது பட்டறிவால் அறிந்தனம். அதனால் நமக்குப் பெரியோரை வியந்து போற்றுதலோ, நம்மினும் சிறியோரை இகழ்தலோ இல்லோம்.’

இது பழந்தமிழரின் வாழ்க்கைக் கொள்கையெனலாம். வாழ்க்கையில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கையும், எப்படியும் வாழலாம் என்ற கொள்கையும் கொண்டோர் இருப்பர். ஆனால் சங்க காலத் தமிழர் இப்படித்தான்-சீரிய முறையில்தான் வாழவேண்டும் என்ற கொள்கையுடையோராயிருந்தனர். இவ்வாறு உயர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டதனால்தான் அவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து சிறந்த நாகரி கத்தைப் படைக்க முடிந்தது.

அடுத்து, நரிவெரூஉத்தலையாரின் பாடல் சிறந்த அறக்கருத்துகளை உட்கொண்டு அமைந்துள்ளது.

பல்சான் lரே பல்சான் நீரே கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள் பயன்இல் மூப்பின் பலசாள் நீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்