பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாட்டும் தொகையும்

இப்பாடலின் கருத்து மிக நுட்பமுடையது. இவ்வாறு அரிய கருத்துக்களையுடையது புறநானூறு.

இவ் உலகம் ஏன் நிலைபெற்றுள்ளது என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, அதற்கு விடையாகக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாட் டு அமைந்துள்ளது.

உண்டால் அம்ம, இவ்வுலகம் - இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் ‘இனிது எனத் தமியர் உண்டலும் இலரே முனிவு இலர் துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழி.எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனையர் ஆகி தமக்குஎன முயலா நோன்தாள் பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே

-புறநானூறு: 182

“புகழுக்காகத் தம் உயிரையும் கொடுப்பர்; ஒரு பழிச் செயல் இவ் உலகத்தைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்திர உலகத்தில் கிடைக்கும் சாவா மருந்தாகிய அமிழ்தம் கிடைத்தாலும், இனி தாயிற்றே என்றெண்ணித் தாமே உண்ணமாட்டார்கள் பிறரை வெறுத்து ஒதுக்கமாட்டார்கள்; பிறர் அஞ்சத்தக்க செயலைச் செய்யாதவர்கள். ஆகிய இத்தகைய தன்மை யுடைய பெரியோர்களே இவ்வுலகத்தில் இருப்பதால்தான் இவ்வுலகம் அழியாமல் உள்ளது’ என்பது இப்பாடலின் கருத்து.

இத்தகையோர் வாழவேண்டும், எல்லோரும் நல்ல வராக வாழவேண்டும்: உலகம் இனிதாக விளங்கவேண்டும் என்ற அவா, வாழ்க்கைத் தத்துவம் இப்பாடலில் புதைந் திருப்பதைக் காணலாம். இத்தகையோர் தம் சிறப்புகள் ப்ெரிதும் பாராட்டத்தக்கதாகும்.