பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:புறநானுTறு 145

நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அல்வழி நல்லை; வாழிய நிலனே!

-புறநானுாறு : 187 என்பது ஒளவையார் பாடலாகும். மாந்தரின் நல்லொழுக் கத்தை வற்புறுத்துகின்றது. நாடாயினும், காடாயினும், மேடாயினும், பள்ளமாயினும் நல்லவர்களைக் கொண் டிருந்தால் நீயும் நல்லதாக இருப்பாய் என்பது இப் பாடலின் கருத்தாகும்.

‘அதாவது வாழ்நிலம் எதுவாயினும், காடாக இருந் தாலும் பள்ளமாக இருந்தாலும் அதைப்பற்றிக் கருத்துச் செலுத்தாமல், அந்நிலத்தில் வாழும் மக்கள் முயற்சியும், நற்பண்பும் கொண்டவராக இருப்பின் இந்நிலம் சிறப் புற்று விளங்கும். நாடாள்வோரும், மக்களும் நல்லவராக விளங்கினால் அந்நாடு சிறப்புறும்’ என்பது இப்பாடலின் கருத்தாகும்.

இப்பாடல்களால் தமிழிரின் உயர்ந்த வாழ்க்கைத் தத்துவம் புலனாகும்.

பழக்க வழக்கங்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும், சமூகத்திலும் சில பழக்கவழக்கங்கள் அமைந்திருக்கும். இது நாட்டுக்கு நாடு,

ஒருவருடைய பழக்க வழக்கங்கள் மற்றவருக்கு ஏற்பில் லாமல் இருக்கலாம்.

சங்ககாலத்தில் காணலாகும் பழக்கவழக்கங்களில் முன் பிறவி, பின் பிறவி நம்பிக்கை, உடன்கட்டையேறுதல், கள்ளுண்டல், இறைச்சி உண்டல் போன்ற பலவகைப் பழக்கவழக்கங்களைக் காணலாம். இங்குச் சான்றாகச் சில வற்றை மட்டும் காணலாம்.

பா.-10