பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பாட்டும் தொகையும்

இம்மைச்செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய்அல்லன்

-புறநானூறு : 1.34

என்ற ஏணிச்சேரி முடமோசியார் பாடல்மூலம் பிறவி நம்பிக்கை இருந்ததை யறியலாம்.

விதிபற்றிய நம்பிக்கை மக்களிடம் வேரூன்றி யிருந்ததைப் பல பாடல்கள் நமக்கு விளக்கும். ஆருயிர் முறைவழிப்படும்’ என்று நம்பினவர்கள் பழந்தமிழர்.

உடன்கட்டையேறுதல்

‘பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் கொல்லியது. என்ற பாடல் (246) கைம்மை நோன் பின் கொடுமையையும், தீப்பாய்தலின் இனிமை யானது கைம்மை கொடுமையானது என்ற கருத்தையும் வெளியிட்டு நிற்பதைக் காண்கிறோம். இப்பாடல் மூலம் அக்காலத்தே கைம்மை நோற்கும் பழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. இதனால் பெண்கள் ஆட வரை கணவன்மாரைத் தன்னுயிராக கொண்டு வாழ்ந்தது புலனாகிறது.

கள்ளுண்டல்

திருக்குறள் முதலிய சங்கம் மருவிய கால நூற்கள், அறநூற்கள் கள்ளுண்டலை ஆதரிக்கவில்லை. ஆனால் சங்க காலத்தில் கள்ளுண்ணும் பழக்கம் பெரிதும் பரவியிருந்தற் கான சான்றுகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும், முதியோரும் புலவோரும் கள்ளுண்ட செய்தி நமக்குக் கிடைக்கிறது. கள்ளிலும் பலவகைப் பயன் படுத்தப்பட்டுள்ளன.