பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாறு 147

சிறியகட் பெறினே எமக்குஈயும் மன்னே

பெரிய கட்பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே

-புறநானுாறு : 235

என்று ஒளவையார் பாடும் பாடல் கள்ளுண்டலுக்குச் சான்று பகரும். கள்ளுண்டல் பற்றிப் புறத்துறைகள் அமைந்துள்ளன. உண்டாட்டு முதலிய துறைகள் போர் வீரர்கள் போருக்குச் செல்லும்முன்னும், வெற்றிப் பெற்று வந்ததும் கள்ளுண்ணும் செய்தியையும் கூறும்.

இறைச்சியுண்டல்

மேற் காட்டிய புறநானூற்று ஒளவையார் பாடலே இறைச்சி உண்டல் பற்றிய கருத்தையும் கூறுகின்றது.

‘என்பொடு தடிபடுவழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே!’ என்ற அப்பாடல் அடி, புலவரும், பெண்களும் கறியுண்ட செய்தியை விளம்புகிறது.

நடுகல் செய்தி

அதியமான் நெடுமான்,அஞ்சியிறந்தபின்பு, அவனுக்கு நடுகல் நட்டு, அதில் பீலிசூட்டி, சிறுகலத்தில் கள் ஊற்றி வைத்து வணங்கினர். இதைப் பார்த்து ஒளவையார் பாடிய பாட்டான,

இல்லா கியரோ, காலை மாலை அல்லா கியர்யான் வாழும் நாளே நடுகல் பீலி சூட்டி, நார்அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோகோடுஉயர் பிறங்குமலை கெழீஇய நாடுஉடன் கொடுப்பவும் கொள்ளா தோனே

-புறநானூறு ; 232

என்ற பாடல் நடுகல் நடுதலையும், அதற்கு மயிற்பீலி சூட்டி, வணங்குதலைதலையும் குறிப்பிடுகின்றது.