பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறு I5I

பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே

-புறநானுாறு ; 107

என்ற பாடலால் பாரியின் சிறப்பும் ஈகைத்தன்மையும் புலனாகும்.

பெருஞ்சித்திரனார் பாடல்மூலம் அன்றைய புலவர்தம் வறுமை வாழ்க்கையினையும் வாடாத அறவுள்ளத் தையும் நாம் அறியலாம்.

வள்ளல்களைப்பாடியபோது கிடைக்கும் யானைமுதலிய பெரும்பொருளை அவர்கள் சேமித்துத் தங்களுக்கென்று வைத்துக்கொண்டவர் அல்லர். தாம் பெற்றுவந்த பொருளை அனைவருக்கும் கொடுத்து, பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பாளர்கள் அவர்கள்.

குமணனைப் பாடிப் பரிசில் பெற்று, அதைத் தம் இல்லிற்குக் கொணர்ந்தார் புலவர், அப்போது அவர் தம் தலைவியிடம் கூறுகின்றார் :

நின்ாயங்து உறைநர்க்கும் நீங்யங்து உறைகர் க்கும் பல்மான் கற்பின் நின்கிளை முதலோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி-மனை கிழ வோயே! பழம்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே

-புறநானுாறு ; 163 என்று ‘தன்னைக்கூடக்கேட்காமல் எல்லோருக்கும் கொடு’ என்று புலவர் கூறுவது அன்றைய சமூகத்தின் அன்புணர் வையே காட்டுகின்றது.