பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பாட்டும் தொகையும்

சங்கப்புலவரின் இத்தனிப்பண்புகள் சமுதாய நலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நன் குணர்ந்திருந்ததால் அன்றிருந்த மன்னர்கள் அவர்களை உயிரினும் மேலாகப் போற்றினர். அறவழியில் குடி மக்கள் நலனை நாடிய மன்னர்களைப் புலவர்களும் மன ந்திறந்து பாராட்டினர். இருவழிப்பாதையாக அமைந்த இந்தப்போற்றுதலில் கனிந்த நட்பு, காலங்களை வென்று வாழும் ஆற்றலுடையது. நடப்பிற் சிறந்த இத்தகைய காட்சிகளைப் புறநானுாறு நம் கண்முன் இன்று நடப்பதைப்போல் காட்டுகிறது.

புறநானூற்றுப்புலவர்கள் அந்நாளைய மன்னர்களி டம் சிறப்பாகக் கொண்டு போற்றியவை அவர்களுடைய வீரமும் கொடைத்தன்மையும் ஆகும். ஆண்மை என்பதே வீரம் என்று கருதப்பட்ட காலம் அது. உலகின் பிற பாகங்களிலும் வீரமே முதன்மைப் பண்பாகப் போற்றப் பட்டதை அந்நாளைய இலக்கியங்களும் வரலாற்றுச் சான்றுகளும் தெளிவாக விளக்குகின்றன. எனவே வீரத்தை வெளிப்படுத்தும் போர்களுக்கு அன்று குறைவே இருந்ததில்லை. எ னி னு ம் எளியோரை வலியோர் போரிட்டு வீழ்த்துதலும், அறவழியில்லாத வழிகளில் பெறும் வெற்றியும் அன்று புலவர்களால் போற்றப் படவில்லை.

போர் என வந்துவிட்டால் அழிவைத் தவிர்க்க இயலாது. இதைப் புலவர்கள் மறந்துவிடவில்லை. எனவே தான் வாய்ப்பு நேரும்போதெல்லாம் போரைத் தவிர்க்க வும், ஒற்றுமையை நிலைநாட்டவும் அவர்கள் முனைந்த னர். அதியமான்மேல் தொண்டமான் படையெடுக்க முனைந்தபோது ஒளவையார் துாதுசென்று அதனைத்

தடுத்த செயலை ஒரு புறநானுாற்றுப்பாடல் செப்புகின்றது பெருந் திருமாவளவன் என்ற சோழனும்!பெருவழுதி என்ற பாண்டியனும், ஒருகால் ஒருசேர இருந்ததைக்