பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுTறு 153

கண்ட காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாார் என்ற புலவர், இன்றுபோல் என்றும் இணைந்திருங்கள். இவ்வாறு இண்ைந்திருந்தால் இவ்வுலகம் முழுவதும் உங்கள் கையில்தான் இருக்கும்’ என்று வாழ்த்துவதை மற்றொரு பாடல் (58) காட்டும்.

சேரன் மாவண்கோவும். பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருமுறை ஒருங்கிருந்ததைக் கண்டார் ஒளவையார். அவ்வளவிலே அவர் மனத்தில் மகிழ்ச்சி ப்ொங்கியது. “வேந்தர்களே! நல்வினை புரியுங் கள்! மீனினும் மழைத்துளியினும் பலகாலம் வாழ்வீர் களாக!’ என்று அவர்கள்ை மனந்திறந்து பாராட்டுகிறார்.

ஓரினத்தார் போர்புரிந்தபோது புலவர்கள் அதை விலக்கியதைப் பல பாடல்கள் காட்டும்.

இவ்வாறு சங்கக்காலப்புலவர்கள் சிறந்த அறநெஞ்சி னராகவும், அரசனுக்கு நண்பர்களாகவும், துர்துவர்களாக வும், ஆசானாகவும், அறிஞராகவும் செயல்பட்டுள்ளனர்.

அரசியல் நிலை

வீரயுகப் பாடலான சங்கப்பாடல்கள் வீரயுகத்தின் பிரதிபலிப்பைக் காட்டி நிற்கின்றன. ஒருவரையொருவர் கொல்வதும், துன்புறுத்துவம், உலகத்தியற்கை என்று கருதிய காலம் அக்காலகட்டம்._அவ்வாறிருந்த காலத்தி லும் சங்ககால மன்னர்கள் சிறந்த முறையில் ஆட்சி புரிந்தனர். ஆட்சி நிலைமாறிச் சென்றபோது மன்னர்கள் புலவர்கள் முதலியோரின் இடிப்புரையையேற்று மீண்டும் அறநெறிக்கு வந்தனர். புறநானுாற்றுப் பாடல்கள் இதை நன்கு உணர்த்தி நிற்கின்றன.

மன்னனே உலகின் உயிராக எண்ணப்பட்டான் அரசனுக்கு ஆலோசனை வழங்க எண்பேராயம் முதலிய பல குழுக்கள் இருந்தன. முடியாட்சியாயினும் குடியுரட் சியே நடைபெற்றது. மன்னன் மக்களிடம் வரிவசூலித்து அரசாட்சி நடத்திவந்தான். அதைவிட்டு அவன் அதிக வரி வசூலிக்க எண்ணியபோது புலவர்_ஒருவர், ஒரு_ வயலில் உள்ள நெல்லை அறுத்துப் பதம் செய்து வைத்திருந்தால் ரு யானைக்குப் பல நாட்களுக்கு அதை உணவாகக் கொடுக்கலாம். ஆனால், அதே யானை அவ்வயலில் புகுந்து