பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாட்டும் தொகையும்

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் நாணிய சேர லாதன் அழிகள மருங்கின் வாள் வடக்கு இருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர் பெரும்பிறிது ஆகியாங்கு

-அகநானுாறு

இப்பாட்டினைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவர். இப்பாட்டு 248 அடிகளையுடையது. வஞ்சியடிகள் இடையில்வந்த ஆசிரியப்பாவாலாகியது. போர்க்களம் பாடும் பொருநன் இப்பாட்டினில் குறிப்பிடப்படுகின் றான். பொருநர்கள் ஒர் ஊரில் விழாவிற் கூடித் தங்கள் இசைத் திறனைக் காட்டி அவ் விழா முடிந்த பின் வேற்றுாரை நோக்கிச் செல்லுங்காட்சி இப் பாட்டின் தொடக்கத்தே இடம் பெற்றுள்ளது, பாலை யாழின் வருணனை மனங்கொளும் வண்ணம் வருணிக்கப் பட்டுள்ளது. பாலைப் பண்ணைக் கேட்ட ஆறலை கள்வர்கள் தங்கள் கொள்ளை, கொலையாகிய கொடிய தொழிலை மறந்து நிற்பர் என்று இசைத் திறனின் இனிய பெற்றி கிளத்தப்பட்டுள்ளது. விறலி பின் கேசாதிபாத வருணனை, ஆசிரியரின் கூர்த்த நோக்கினையும் அரிய சொற்களை உரிய இடத்திற்பெய்து கவிதையைச் சிறக்கச் செய்யும் ஆற்றலையும் புலப்படுத்துகின்றது. கரிகாற் பெருவளத்தான் பொருநரை வரவேற்று விருந்துதந்து உபசரிக்கும் வள்ளன்மையும் வருணிக்கப்படுகின்றது. பல்வேறு உணவுவகைகள் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. தம் கலைத்திறனைக் காட்டிய பொருநர்க்கு தேரும் யானையும் நல்கும் கரிகாலனின் கொடை மனம் குறிப்பிடப்படுகின்றது. பொன்னாலாகிய மாலையினைப் பரிசாகப் பெறும் விறலியரின் கலைத்திறம் சுட்டப்படு கின்றது. வெண்ணிப் பறந்தலையின் இளம் வயதிற்