பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாட்டும் தொகையும்

யானை தாக்கினும், அரவுமேல் செலினும் நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும், சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை

-பெரும்பாணாற்றுப்படை : 1.34 -189

மறக்குடி பிறந்த மைந்தனின் மறச்செயல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிக்கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த, புலிப்போத்து அன்ன, புல் அனற் காளை, செல்காய் அன்ன கருவில் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம் புக்கு, காள்ஆ தந்து நறவு கொடை தொலைச்சி, இல் அடு கள் இன் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி, மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச் சிலைகவில் எறுழ்த் தோள் ஒச்சி, வலன் வளையூஉ, பகல்மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை முரண்தலை கழிந்த பின்றை...

-பெரும்பாணாற்றுபேடை : 137 - 147

துணங்கை கூத்து பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில் அவல் எறி உலக்கைப் பாடுவிறந்து, அயல கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம், நீங்கா யாணர், வாங்குகதிர்க் கழனி கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன, பைதுஅற விளைந்த பெருஞ் செந்நெல்லின் நூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர் பாம்புஉறை மருதின் ஓங்குசினை நீழல், பலிபெறு வியன்களம் மலிய ஏற்றி,