பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முல்லைப் பாட்டு

பத்துப்பாட்டு நூலுள் ஐந்தாவதாக அமைந்திருக்கும் பாட்டு முல்லைப்பாட்டாகும். பத்துப்பாட்டு நூலுள் அடியளவாற் குறைந்த பாட்டு இதுவாகும். 103 ஆசிரி யப்பா அடிகளால் ஆன நூல் இது. பத்துப் பாட்டிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர், ‘இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையா மல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று முல்லையொழுக்கத்திற்குப் பொருள் காண்பார். முல்லை நில ஒழுக்கமாகிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இப் பாட்டுள் நன்கு சிறப்பிக்கப்படுவதால் இப்பாட்டு ‘முல்லை பாட்டு’ என்னும் பெயர் பெற்றது.

இப்பாட்டின் பொருளமைதி பின்வருமாறு : மாற்று நாட்டு மன்னன் மேற் படையெடுத்துச் சென்ற மன்ன னொருவன் தன் துணைவியைவிட்டுப் பிரிந்து செல்லுங் காலையில் மாரிக்காலத்தே தான் வினைமுடித்து உறுதி யாகத் திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச்செல்கிறான். கார் காலம் தொடங்கிவிட்டது. சொன்னவண்ணம் தலைவன்

கருப்பிவரவில்லை. எனவே, தலைவி துயருறுகின்றாள். அவாம் துயரைக் கண்ட முதுபெண்டிர் மரக்காலில் முல்லைப்பு:வினையும் நெல்லையும் எடுத்துக்கொண்டு பll.hl பருங்கே அமைந்திருக்கும் திருமால் கோயிலிற்குச்

செ. ப. நெல்லையும் மலரையும் து வித் தலைவன் விரை